இது 9ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட கோவில். இதன் மற்றொரு பெயர் சின்னதிருப்பதி. பெருமாள் கோவிலின் துணை பெயர், ஸ்ரீதேவி, பூதேவி, சமேக சென்ராய பெருமாள், இக்கோவிலானது கிழக்கு நோக்கி உள்ளது. கிருஷ்ண தேவராயருக்கு இக்கோவிலில்தான் திருமணம் நடைபெற்றது.
கோவில் மண்டபத்தில் திருமங்கை ஆழ்வார், பூதாழ்வார், நம்மாழ்வார் என மூன்று ஆழ்வார்கள் உள்ளனர்
திருக்கோவிலின் சிறப்பு
மகாமண்டபத்தில் 9ம் நூற்றாண்டில் மூலிகை ஓவியம் (painting) வரையப்பட்டுள்ளது.
பெருமாளின் மகா விஷ்வரூபம் உலகமே எனக்கூரியது என்றும் சொல்ல கூடிய காட்சி வரைபடமாகவும், இராமாயணம், மஹாபாரதம், ராமர் பட்டாபிஷேகம் ஆகிய அனைத்து காட்சியும் மூலிகை ஓவியமாக இக்கோவிலில் வரையப்பட்டுள்ளது.
கோவிலின் முன்புறம் கருடாள்வார் தனி மண்டப திருக்கோவிலாக உள்ளது.
இதன் பின்புறம் கொடிமரம் தீபஸ்தம்பம் உள்ளது.
இக்கோவிலில் வழிபட்டாள் திருமணம் கைகூடும்
இந்த திருக்கோவில் இந்திய தொல்பொருள் ஆராய்ட்சி துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு தினசரி பூஜைகள் நடத்தப்படுகின்றன.
வைகுண்ட ஏகாதேசி அன்று சொர்கவாசல் திறப்பு சிறப்பாக நடைபெறும்.
சித்ரா பௌர்ணமி அன்று 10 நாள் திருவிழா சிறப்பாக நடைபெறும். பிரம்ம உச்சம் நடைபெறும்.